மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்: விவசாயிகள் 2 பேர் உடல் நசுங்கி சாவு

ஒரே கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேரும் விபத்தில் பலியான சம்பவம் பெரும்பேடு கிராமத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தினத்தந்தி

பொன்னேரி,

பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது46) அதே பகுதியை சேர்ந்தவர் வாசு(40). விவசாயிகளான இவர்கள் 2 பேரும் நேற்று விவசாய பொருட்களை வாங்குவதற்காக பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களது மோட்டார் சைக்கிள் லிங்கபையன்பேட்டை கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு டிராக்டர் திடீரென விவசாயிகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தனர்.

அப்போது வேகமாக வந்த டிராக்டர், நடுரோட்டில் கிடந்த 2 பேர் மீதும் கண் இமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய டிரைவர், டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு