மாவட்ட செய்திகள்

வர்த்தகர் சங்க துணைச்செயலாளரிடம் தகராறு செய்த வாலிபர் கைது

நீடாமங்கலத்தில் வர்த்தகர் சங்க துணைச்செயலாளரிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் சேகர். இவர் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க துணைச்செயலாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த ராசு என்கிற கார்த்திகேயன், காமராஜ், குறலரசன், சிலம்பரசன், வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் சம்பவத்தன்று இரவு நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்தனர்.

பின்னர் 5 பேரும் நீடாமங்கலம் அண்ணாசிலை பகுதியில், தனது கடையில் இருந்த நீடாமங்கலம் வர்த்தகர் சங்க துணைச்செயலாளர் சேகரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து சேகர் நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறலரசனை (23) நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்