மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பாதையில் பலத்த மழைக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நட்சத்திர ஏரியில் இருந்து அதிக உபரி நீர் வெளியேறி வருகிறது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. மழையின்போது பலத்த காற்று வீசியதில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மயிலாடும்பாறை அருகே மிகப்பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

ஊரடங்கு மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

இதனால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

இதனிடையே போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், முக கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்