தேவி; தருண் 
மாவட்ட செய்திகள்

மீஞ்சூர் அருகே சோகம்: ஏரியில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி

மீஞ்சூர் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற அண்ணன், தங்கை இருவரும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

அண்ணன், தங்கை

மீஞ்சூர் அருகே உள்ள செம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் (வயது 42). இவருக்கு தருண் (17) என்ற மகனும், தேவி (14) என்ற மகளும் இருந்தனர். தருண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

தேவி அத்திப்பட்டு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், இவர்கள் இருவரும் அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில், அதே பகுதியில் உள்ள பாலமேடு ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கினர். அப்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று இருவரும் கூச்சலிட்டனர்.

பிணமாக மீட்பு

இதனை அப்பகுதியில் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கண்டதும் விரைந்து வந்து இருவரையும் உயிருடன் மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் நீரில் மூழ்கி மாயமானதால், நீரில் குதித்து அவர்களை தேடிய நிலையில், பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தருண், தேவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்