மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர்- வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

தினத்தந்தி

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் நீலநிற பூப்போட்ட முழுக்கை சட்டையும், கிரே நிற கால்சட்டையும் அணிந்து இருந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்