மாவட்ட செய்திகள்

தபால் ஓட்டு படிவம் வழங்குவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

தபால் ஓட்டு படிவம் வழங்குவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி,

ஊட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுக்காக படிவம் 12-டி வழங்குவது தொடர்பான பயிற்சி, எச்.ஏ.டி.பி. அரங்கில் நடைபெற்றது.

பயிற்சியில் சப்-கலெக்டர் மோனிகா பேசும் போது, சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரடியாக வந்து வாக்களிக்கலாம். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 1,865 பேர், 80 வயதுக்கு மேற்பட்டோர் 3 ஆயிரத்து 136 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு படிவம் வழங்குவது தொடர்பாக நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏதேனும் சந்தேகம் இருந்தால், கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றார். இதில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை