புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 105 தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. முதுநிலை விரிவுரையாளர் முருகன் வரவேற்று பேசினார். இதில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) நடராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், வகுப்பறையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தக்க முறையில் தீர்வு காணவும், மாணவர்களிடையே காணப்படும் கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் செயலாராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் பணித்திறன் மிக்க 105 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு செயலாராய்ச்சி பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார். அப்போது, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் அன்புச் செழியன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் அய்யாவு, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வியாளர்கள் முருகன், ஆனந்தராஜ், ராஜ்குமார், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக ராஜ்குமார் செயல்பட்டார். முடிவில் முதுநிலை விரிவுரையாளர் எம்.மாரியப்பன் நன்றி கூறினார்.