இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி அன்று மோகன்ராஜ் திருவள்ளூர் நோக்கி வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான
ஈக்காடு ஒதிக்காடு பகுதியை சேர்ந்த பழனி (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.