மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி

கொடைக்கானலில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

கொடைக்கானல்,

கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர் வனராஜ். அவருடைய மகன் வின்சென்ட் ஜெய பிரசாந்த் (வயது 21). அதே பகுதியை சேர்ந்த சிவா மகன் நவீன் (20), ரவீந்திரன் மகன் வினோத் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று இரவு இவர்கள், ஒரு மோட்டார் சைக்கிளில் கொடைக்கானல் நகர்ப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது, கொடைக்கானல் அருகே புதுப்புத்துரில் இருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே வின்சென்ட் ஜெயபிரசாந்த் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார். நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பழனியை சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தகுமார் மீது, வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்