மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆய்வு

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலையில், மாவட்ட காவல்துறையின் பயன்பாட்டில் உள்ள 160 மோட்டார் சைக்கிள்கள், 126 கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். அவர், பழுதடைந்த வாகனங்களை பழுது நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போலீசார் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதே போல் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போலீசார் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை கடைபிடித்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு