மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார்.

அவரை தூத்துககுடி வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பூரணகும்ப மரியாதை

அதன்பின்னர் விமான நிலையத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மேளதாளங்கள் முழங்க முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை ஆத்தூர், பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை