சேலம்,
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன்(வயது 32), வீராணத்தை சேர்ந்த மணிவேல்(28) ஆகியோர் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பாமல் ரூ.13 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.