மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் இரு வேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வாலிபர் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள காந்தி நகரை சேர்ந்த வாலிபர் சுப்புராஜ் (வயது 28). இவருக்கு திருமணமாகி சூர்யா (22) என்ற மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு கவரைப்பேட்டையில் இருந்து சத்யவேடு சாலை வழியே மாதர்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சுப்புராஜ் சென்று கொண்டிருந்தார்.

குருத்தானமேடு அருகே செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், சுப்புராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு விபத்து

கவரைப்பேட்டையை அடுத்த சிறுவாபுரியை சேர்ந்தவர் தேவராஜ் (21). கல்லூரி மாணவர். இவர் தொலைதூரக்கல்வியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி கவரைப்பேட்டையில் இருந்து சின்னபேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் தேவராஜ் சென்று கொண்டிருந்தார்.

பெருவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த தேவராஜ், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கண்ட 2 சம்பவங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்