மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே கோவில் பூசாரி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருப்பத்தூர் அருகே நடந்த பூசாரி கொலை வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே நடந்த பூசாரி கொலை வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவில் பூசாரி

திருப்பத்தூர் தாலுகா, குரிசிலாப்பட்ட அடுத்த வடுகமுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32). குடிநீர் தொட்டி இயக்குபவராக வேலை செய்து வந்தார். மேலும் சீனிவாசன் தனது வீட்டின் அருகே காளியம்மன் கோவில் கட்டி வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி தினத்தன்றும் சிறப்பு பூஜை செய்து, குறி சொல்லி வந்தார்.

சீனிவாசனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் கணவரை பிரிந்துச்சென்றார். இந்தநிலையில், குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதுள்ள இளம்பெண் ஒருவர் சீனிவாசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறத்தி வந்தததாகவும், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

சிறுவன் உள்பட 2 பேர் கைது

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அதிகாலையில் காளியம்மன் கோவில் அருகே பூசாரி சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து குரிசிலாப்பட்டு போலிசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் பூசாரியை கொலை செய்த நபர்கள் யாரென விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பூசாரி சீனிவாசன் கொலை செய்யப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையில், வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி கிளினரான வெங்கடேசன் (45) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்