மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

வெங்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே மேல்கொண்டையார் ஊராட்சியை சேர்ந்த கரையான் மேடு பகுதியில் வசித்து வந்தவர் ஜெகதீசன் (வயது 26). ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் திருவள்ளூர் பகுதியில் பணியாற்றி வந்தார். மேலும், திருவள்ளூர் பூங்கா நகரில் சிவன்வாயல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருடன் கூட்டாக சிக்கன் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு ஜெகதீசன் சிவன்வாயல் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் போலீசார் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் சிவன்வாயல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வதட்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (24) ஆகியோருடன் ஜெகதீசன் அன்றிரவு செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்த நிலையில், போலீசார் மணிகண்டன் மற்றும் வினோத்குமாரை அழைத்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

விசாரணையில் மணிகண்டன் கூறியதாவது:-

தனக்கு தர வேண்டிய பணத்துக்காக பூங்கா நகரில் உள்ள சிக்கன் கடையை தருமாறு கேட்டேன். ஆனால் ஜெகதீசன் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வினோத்குமார் புறா பிடிக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று ஜெகதீசன் புறா பிடித்து வந்தார். ஆகவே நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதற்காக அவரை அழைத்து மது குடிக்க வைத்து வெட்டிக்கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்