மாவட்ட செய்திகள்

கீழ் ஒரத்தூரில் மனுநீதிநாள் முகாம்: ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கீழ் ஒரத்தூரில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா வழங்கினார்.

தினத்தந்தி

சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அடுத்த கீழ் ஒரத்தூர் ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதற்கு வேப்பூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் தனிதாசில்தார் ரத்தினாவதி, வேப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அண்ணாதுரை, மண்டல தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ் ஒரத்தூர் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா கலந்து கொண்டு பேசினார்.

முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் 37 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், தலைமை நில அளவர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்