மாவட்ட செய்திகள்

வடலூரில்: அரசாணை நகலை எரித்து ஆசிரியர்கள் போராட்டம் - 64 பேர் கைது

வடலூரில் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 64 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

வடலூர்,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் வடலூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலூர் மாவட்ட கிளை, ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியன சார்பில் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தேன்மொழி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராயப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஜே.எஸ்.ஆர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரா.வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஊதியம் குறைக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நகல்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். இதன் மூலம் 24 ஆசிரியைகள் உள்பட 64 பேர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்