வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையா (வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயராணி (35). இவர்களுக்கு பவித்ரா (1 வயது) உள்பட 4 பெண் குழந்தைகள். ஜெயராணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் பவித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதனால் சிகிச்சைக்காக ஏர்வாடி, வெள்ளமடம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனாலும் பவித்ராவுக்கு காய்ச்சல் குறையவில்லை.