மாவட்ட செய்திகள்

வேட்டவலம், லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

வேட்டவலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காந்தி சாலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜேஷ் (வயது 35). இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி (33) என்ற மனைவியும், ஹரீஷ் (7), வர்ஷன் (6) என்ற 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

ராஜேஷ் நேற்று இரவு வேட்டவலம்- திருவண்ணாமலை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது தம்பியின் மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார்.

அண்ணாநகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்த லாரி ராஜேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ராஜேஷின் மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு