மாவட்ட செய்திகள்

பழுதடைந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பழைய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய அலுவலக கட்டிடம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் வடக்கு வாயலூர் கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அமைத்த கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்துவரும் தொடர் மழையால் இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு கழிவறை, குடிநீர். மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் இந்த பழைய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய அலுவலக கட்டிடம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்