மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம்

பென்னாகரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பென்னாகரம்,

பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் நேற்று, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகா, ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத்தலைவர்அற்புதம் அன்பு ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கூத்தப்பாடியில் சாக்கடை கால்வாய் மூடிகள் அமைக்கவும், குடிநீர், தெருவிளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்