மாவட்ட செய்திகள்

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

செம்பட்டி அருகே வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வேலகவுண்டன்பட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமம் வழியாக குடகனாறுக்கு செல்லும் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்கால் சுமார் 20 அடி அகலம் கொண்டது. இந்த வாய்க்காலையும், அந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வேலகவுண்டன்பட்டி கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் நேற்று மாலை வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அதிகாரிகள் யாரும் வராததால் கலைந்து சென்றனர்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை வருகிற 26-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்