மாவட்ட செய்திகள்

விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த குடோன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்த குடோன் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,455 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,481 வாக்கு எண்ணும் எந்திரங்கள் ஆகியவை தனித்தனியாக கம்பிவேலி அமைத்து பாதுகாப்பான முறையில் இருந்ததை மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், தேர்தல் தனி தாசில்தார் வெற்றிவேல், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், தே.மு.தி.க. நிர்வாகி மனோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்