மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தினத்தந்தி

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி உரிய காரணம் இல்லாமலும், முக கவசம் அணியாமலும் சிலர் நேற்று இருசக்கர வாகனங்களில் சுற்றிக்கொண்டிருந்தனர். அப்படி சுற்றிக்கொண்டிருந்த 6 நபர்களை பிடித்து விசாரணை செய்த கல்பாக்கம் போலீசார் அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

இதேபோல சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிவந்த 5 வாகனங்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்