மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மீன்வலை, சிப்பிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு

தூத்துக்குடியில் மீன்வளத்துறை சார்பில் மீன்வலை மற்றும் சிப்பிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் மீன் வலையால் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அமைக்கப்பட்டு இருந்தது. இதே போன்று முத்துநகர் கடற்கரை பூங்கா பகுதியில் சிப்பிகளால் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தொடர்ந்து முத்துநகர் கடற்கரையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி சிப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் பார்வையிட்டார். தொடர்ந்து சங்குகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பதிவு செய்யப்பட்ட கீசெயின்களை பொதுமக்களுக்கு தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகளால் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களையும் பார்வையிட்டார். சிறப்பான விழிப்புணர்வு கோலம் வரைந்த திருநங்கைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் பாலசரசுவதி, தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையாளர் பிரின்ஸ், மாவட்ட கலெக்டரின் மனைவி அத்யாஷா நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்குப்பதிவு முன்தினம் வரை தொடர்ந்து நடைபெறும். இதுவரை முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் குறித்து இரண்டு லட்சத்துக்கு அதிகமான நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்