மாவட்ட செய்திகள்

தேனி நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

தேனி நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

தினத்தந்தி

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அத்துடன் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம், பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது.

தேனி நாடாளுமன்ற தேர்தலில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்களுடன் நோட்டாவுக்கான சின்னமும் இடம் பெற்று உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு கருவியுடன், 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு தேர்தல் நடக்கும்.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்கு 740 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதுபோல், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்கு 700 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடி, கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களிலும் சின்னங்கள் பொருத்தப்பட உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்