மாவட்ட செய்திகள்

ஆவடியில் சுற்றித்திரிந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர்

ஆவடியில் சுற்றித்திரிந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் மீட்டனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினத்தந்தி

ஆவடி,

ஆவடி பஜார் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் பொருட்கள் வாங்கிக்கொண்டு பணம் இல்லை என்றதால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் கிருஷ்ணசாமி ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக போலீசார் அங்கு சென்று 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், இலங்கை களம்பத்தூர் பகுதியை சேர்ந்த முகமது தாஜூதீன் (வயது 44) என்பதும், திருமணமாகாத இவர், 2015-ம் ஆண்டு இந்தியா வந்ததும், மற்றொருவர் இலங்கை தம்பதேனியா பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (60) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 பிள்ளைகள் இருப்பதும், 2016-ம் ஆண்டு இவர் இந்தியா வந்ததும் தெரியவந்தது.

ஆனால் ஆவடி போலீசாருக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதால் கியூ பிரான்ச் மற்றும் இலங்கை கண்காணிப்பு பிரிவு, சி.ஐ.ஏ. உள்ளிட்ட பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று காலை இலங்கை தூதரக செயலாளர் அட்லிஸ் மற்றும் என்.எஸ்.டி. பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடகிருஷ்ணராவ் ஆகியோர் ஆவடி போலீஸ் நிலையத்தில் பிடிபட்ட இலங்கையை சேர்ந்த 2 பேரிடமும் விசாரித்தனர்.

அதில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இந்தியா வந்த இருவரும், தங்களது பாஸ்போர்ட்டைதொலைத்துவிட்டதால் இலங்கை செல்ல முடியாமல் ஆவடி உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.

ஆனால் இவர்கள் மீது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இருவருடைய முகவரியை வைத்து இலங்கையில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்தனர். அதில் இவர்கள் இருவரும் கூறி அனைத்தும் உண்மை என தெரிந்தது.

இதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள், அவர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

* தேனாம்பேட்டையில், சாலையில் நடந்து சென்ற கேதார்நாத் என்ற நபரை தாக்கி செல்போனை பறித்த வழக்கில், திருவல்லிக்கேணியை சேர்ந்த முனீர்பாட்ஷா, ரியாஸ் பாட்ஷா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

* தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 18 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

*நீலாங்கரை அருகே கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நந்தம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சென்ற அவரது உறவினர் பெண்ணான சரஸ்வதி(28) நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார்.

*பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது மோதியது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?