மாவட்ட செய்திகள்

கிருஷ்ணா ஆற்றில் நீர் நாய்கள், முதலைகள்; மக்கள் பீதி

ராய்ச்சூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் மராட்டிய அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ராய்ச்சூர்,

கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம்இதனால் கரைபுரண்டு ஓடியது. இதில் ஏராளமான முதலைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் நீரில் அடித்து வரப்பட்டன. ஊருக்குள் நீர் புகுந்ததால் முதலைகள், மலைபாம்புகளும் தஞ்சமடைந்தன.

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் தற்போதும் கிருஷ்ணா ஆற்றில் இருகரைகளை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

தற்போது ராய்ச்சூர் அருகே கட்லூர் கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் அதிகளவில் முதலைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க செல்ல முடியாமல் கடும் பீதி அடைந்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை