மாவட்ட செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் பேசுவோம் சரத்பவார் சொல்கிறார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் பேசுவோம் என சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 48 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புனே, அவுரங்காபாத், கொங்கன் மண்டலங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிர்கள் நாசமாகின.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உஸ்மனாபாத் மாவட்டம் துல்ஜாபுர்- பரந்தா பகுதியில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு நிவாரணம்

இது எதிர்பார்க்காதது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்ய முடியாத அளவுக்கு விவசாய நிலங்கள் சேதமடைந்து உள்ளன. வெள்ளம் இந்த பகுதியில் வேளாண் பொருளாதாரத்தை அழித்து உள்ளது. நன்கு வளர்ந்த பயிர்கள் அழிந்து உள்ளன. இதை எல்லாம் சா செய்ய வேண்டும். இதை மாநில அரசால் தனியாக செய்ய முடியாது. விவசாயிகளுக்கு நீண்ட கால மற்றும் உடனடி நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் பேசுவோம்.

இது மிகப்பெரிய இழப்பு. நாம் ஏற்கனவே பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து உள்ளோம். எனவே இதில் இருந்தும் மீண்டு வருவோம்.

இவ்வாறு அவா கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை