மாவட்ட செய்திகள்

ஏ.கே.டி. ஆறுமுகம் பிறந்தநாள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்க ஏற்பாடு

ஏ.கே.டி. ஆறுமுகம் தனது பிறந்தநாளையொட்டி ஏழைப் பெண்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இலவச சேலை வழங்குகிறார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முதலில் தனது பெற்றோர் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார்.

பின்னர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து சித்தானந்தா கோவில், திரவுபதி அம்மன் கோவில் மற்றும் தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து தனது இல்லத்தில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து 5 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் செந்தில்குமரன் ஆகியோர் தலைமையில் மணக்குள விநாயகர் கோவிலில் இன்று தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

ஏ.கே.டி.ஆறுமுகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது தொண்டர்கள் கடந்த 1-ந் தேதி முதல் தொகுதிகளில் பல்வேறு இடங்களில் அன்னதானம், இலவச சர்க்கரை, ரத்ததானம் வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு