மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 8 பவுன் தங்கசங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பெண்ணிடம் 8 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வயலாநல்லூரை சேர்ந்தவர் நாதமுனி (வயது 52). இவரது மனைவி அனிதா(45). இந்நிலையில் நேற்று முன்தினம் அனிதா வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு நடந்துச் சென்றார்.

அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், திடீரென அனிதாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் பதறிப்போன அவர் சங்கிலியை பிடித்து கொண்டார். இதில் சங்கிலி பாதியாக அறுந்து அனிதாவின் கையில் 4 பவுனும், சங்கிலி பறித்தவர்களிடம் 8 பவுன் சங்கிலியும் சிக்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் கிடைத்தவரை லாபம் என்று தப்பிச்சென்றனர்.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அனிதாவிற்கு காயம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நாதமுனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு