மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேப்பட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை; கணவர் கைது

பெங்களூருவில் நடத்தையில் சந்தேப்பட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்

பெங்களூரு: பெங்களூருவில் நடத்தையில் சந்தேப்பட்டு பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தம்பதி இடையே தகராறு

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காவேரிபுரா, 13-வது கிராஸ், ராமமந்திரா ரோட்டில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி வனசாட்சி (வயது 31). டிரைவரான அசோக் கார் ஓட்டி வருகிறார். தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வனசாட்சி வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அசோக்கின் சொந்த ஊர் குலியாரு துர்கா ஆகும்.

இதையடுத்து, தனது 3 குழந்தைகளையும் தனது சொந்த ஊருக்கு சமீபத்தில் அவர் அனுப்பி வைத்திருந்தார். இதன் காரணமாக தம்பதி மட்டும் பெங்களூருவில் தனியாக தங்கி இருந்தனர். இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக அசோக், வனசாட்சி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், கடந்த 2 நாட்களாக வனசாட்சியின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அழுகிய நிலையில் உடல்

மேலும், அவரது சகோதரி, சகோதரர் 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட போதும் வனசாட்சி எடுத்து பேசாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வனசாட்சியின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு காவேரிபுராவுக்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டுக்கதவு பூட்டி கிடந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், காமாட்சி பாளையா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வனசாட்சி உடல் அழுகிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அசோக்கும் மாயமாகி இருந்தார். இதனால் அவரே தனது மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, அசோக்கை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அசோக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

விசாரணையில், தனது மனைவியின் நடத்தையில் அசோக்குக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், கடந்த 17-ந் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு அசோக் வீட்டுக்கு திரும்பிய போது வனசாட்சி செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். உடனே யாருடன் பேசுகிறாய் என்று அசோக் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் வனசாட்சியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அசோக் தப்பி ஓடி இருந்தார்.

வனசாட்சி கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆனதால், உடல் அழுகி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான அசோக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை