மாவட்ட செய்திகள்

விமானப்படையில் வேலை

இந்திய விமானப் படையில் சிவிலியன் ஸ்டாப், குக், மெஸ் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்திய விமானப் படையில் குரூப் சி பிரிவின் கீழ் வரும் சிவிலியன் ஸ்டாப், குக், மெஸ் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 2712018 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை பற்றிய விரிவான விவரங்களை அந்த தேதிக்குரிய எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்