மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகராறு செய்த தொழிலாளி அடித்துக்கொலை

களியக்காவிளை அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

தொழிலாளி

களியக்காவிளை அருகே இடைக்கோட்டை அடுத்துள்ள பாலோட்டுவிளையை சேர்ந்தவர் செல்லன் (வயது 70). இவருடைய மகன் ரெஜிகுமார் (37) தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

ரெஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரெஜிகுமார் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் திடீரென்று செல்லனை தாக்கியதாக தெரிகிறது.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த செல்லன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரெஜிகுமாரின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரெஜிகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதுபற்றிய தகவல் பக்கத்து ஊரில் வசித்து வந்த ரெஜிகுமாரின் அக்காள் ரெஜினிக்கு தெரிய வந்தது. அவர் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரெஜிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்கு பதிவு செய்தார். களியக்காவிளை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, மகனை அடித்து கொலை செய்ததாக செல்லனை கைது செய்தனர். பெற்ற மகனை, தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்