மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் விஷார் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிச்சவாடியில் இருந்து விஷார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

முசரவாக்கம் என்ற இடத்தில் இவர் சென்றபோது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்