திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. உதவி பேராசிரியை வசந்தி வினோலியா வரவேற்று பேசினார்.
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியை ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளை விளக்கி கூறினார்.
கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். ஆசிரியை சுஜாவதி பாடல் பாடினார். உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார்.