மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நெல்லை,

பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி எதிரே எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் எனும் பாடத்தை நீக்கியதை கண்டித்தும், அந்த பாடத்தை மீண்டும் இணைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி நாறும்பூநாதன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கரன், இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி உச்சிமாகாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்