மாவட்ட செய்திகள்

பெண்கள் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது

மும்பை கோரேகாவ் கிழக்கு, மேற்கு விரைவு சாலை சர்வீஸ் ரோட்டில் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் 2 பெண்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

தினத்தந்தி

மும்பை,

வாலிபர் ஒருவர் அப்போது அங்கு வந்து திடீரென தனது பேண்டை கழற்றி பெண்களின் முன் ஆபாச செயலில் ஈடுபட்டார். மேலும் அந்த வாலிபர் பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் உதவிகேட்டு சத்தம்போட்டனர்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் பெண்கள் முன் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் மலாடு கிழக்கு குரார் விலேஜ் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சல்மான்கான்(வயது24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோல அந்தேரியில் உபேர் வாடகை கார் டிரைவர் ஒருவர் பெண் பயணி முன்னால் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே அவரை உபேர் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்