மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. அவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 18). இவர், அப்பகுதியில் உள்ள மைக்செட் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், ஒட்டன்சத்திரம் அருகே நாகணம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் மரத்தின் மீது சீரியல் பல்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில், கிருஷ்ணகுமார் வைத்திருந்த வயர் விழுந்தது. இதனால் மின்சாரம் பாய்ந்து கிருஷ்ணகுமார் தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை