செய்திகள்

தொழிலை அபிவிருத்தி செய்வதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்தவர் கைது

தொழிலை அபிவிருத்தி செய்வதாக கூறி ரூ.35 லட்சத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 45), கட்டிட ஒப்பந்ததாரர். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி (50), இவருடைய மகன் குருபிரகாஷ் (25). இவர்கள் இருவரும் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பொக்லைன் எந்திரங்களை வாடகைக்கு விடும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த தொழில் சம்பந்தமாக ராஜாவுக்கும், ராமமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு செம்டம்பர் மாதத்தில் ராமமூர்த்தியும் அவரது மகன் குருபிரகாசும் ராஜாவிடம் சென்று தங்களது தொழிலை அபிவிருத்தி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறி அவரிடம் இருந்து ரூ.35 லட்சத்தை கடனாக பெற்றுள்ளனர்.

இந்த கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொடுக்காமல் இருவரும் காலம் தாழ்த்தி வந்தனர். ராஜா பலமுறை சென்று பணத்தை தரும்படி வற்புறுத்தி கேட்டதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து ராஜா, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் ராமமூர்த்தி, குருபிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது மகன் குருபிரகாசை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு