செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் டீக்கடைகள் காலை 9 மணி வரை மட்டுமே செயல்படும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாநகரில் காலை 9 மணி வரை மட்டுமே டீக்கடைகள் செயல்படும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது டீ கடைகளில் பொது மக்கள் அவசியமின்றி அதிகளவு கூடுவது கண்டறியப்பட்டது.

பொது மக்களின் இந்த செயலால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிகழ சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனவே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

நெல்லை டவுன் நயினார்குளத்தில் இயங்கி வந்த மொத்த காய்கறி மார்க்கெட் தற்போது புதிய பஸ்நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் நடைமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு