செய்திகள்

திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வதைக் காண முடிகிறது. குறிப்பாக தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6,416 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 60 சதவித கொரோனா தொற்று உள்ளூர் பரவல் மூலம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2 இடங்களில் சமூக பரவல் உறுதியாகியுள்ளது.எனவே, கொரோனா தொற்று தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு