தாம்தாரி,
சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் அரசில் வணிக வரித்துறை மந்திரியாக இருப்பவர் கவாசி லக்மா. இவர் தாம்தாரி மாவட்டம் குருத் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் நக்சலைட்டுகள் பாதிக்கப்பட்ட தொகுதியை சேர்ந்தவன். ஆனால் அங்கு சாலைகள் ஹேமமாலினியின் கன்னம் போல போடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஊழல் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது என்றார். (குருத் தொகுதி எம்.எல்.ஏ. அஜய்சந்திராகர் பா.ஜனதாவை சேர்ந்தவர்)
இதுகுறித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் ராமு ரோஹ்ரா கூறும்போது, லக்மாவின் கருத்து காங்கிரஸ் தலைவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. பெண் எம்.பி. பற்றி இப்படி கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. இதற்காக லக்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.