செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட உறுப்பினர் ரெங்கசாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் அகஸ்டின், எச்.எம்.எஸ். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சேலம் உருக்காலை, பாதுகாப்பு தொழிற்சாலைகள், ரெயில்வே ஆகியவற்றை தனியார்மயமாக்கக்கூடாது.

குறைந்த பட்ச மாத ஊதியமாக ஊழியருக்கு மாதம் ரூ.18 ஆயிரத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணாசிலை அருகில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன், மின்சாரவாரியம் சங்க தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்