தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்டர் பகுதியில் கிடந்த குண்டுகள் வெடித்து காயமடைந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவமிடையே மோதல் நடந்த பகுதியில் கிடந்த வெடிக்காத குண்டுகள் வெடித்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் உயிரிழந்து உள்ளான். #kashmir

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சாய்கண்ட் கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் வெடிக்காத நிலையில் சில குண்டுகள் அந்த பகுதியில் கிடந்துள்ளன.

இந்த நிலையில், அப்பகுதியில் அமைந்த வீட்டில் இருந்து, துப்பாக்கி சூடு தாக்குதலினால் சேதமடைந்த பொருட்களை சிலர் அப்புறப்படுத்தினர். அதில் இருந்த வெடிக்காத நிலையிலான குண்டுகளை முஷாரப் பயா (வயது 10) என்ற சிறுவன் எடுத்துள்ளான். அது திடீரென வெடித்துள்ளது.

இதில் காயமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவன் உயிரிழந்து விட்டான்.

#kashmir #boy #shell #explosion

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை