சாப்ரா,
பீகாரின் சப்ரா நகரில் இருந்து சூரத் நோக்கி செல்லும் தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 9.45 மணியளவில் சாப்ரா நகரின் கவுதம் ஆஸ்தான் பகுதியில் வந்தபொழுது விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மீட்பு குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் பீகாரின் சஹடாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 பயணிகள் பலியாகினர் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.