தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை தொடர்பாக 152- பேர் கைது: காவல் துறை

டெல்லி வன்முறை தொடர்பாக 152- பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது வன்முறை வெடித்தது. இதனால், டெல்லி போர்க்களமாக மாறியது.

காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து விடியோ ஆதாரங்களை கைப்பற்றிய டெல்லி காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி காவல் துறை ஆணையர் எஸ்.என் ஸ்ரீவாஸ்தவா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் தொடர்பான விசாரணையில் இதுவரை 152- பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய சங்கத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்