தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 191 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள ஆட்கொல்லி கொரோனா மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை, புனே நகரங்களில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காவலர்கள் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை 22,460 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,022 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 3,199 பேர் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மராட்டிய போலீசார் 239 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி