தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ககாபோரா பகுதியில் உள்ள தோபி மொஹல்லாவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், புல்வாமாவின் சம்பூராவில் வசிக்கும் இஷ்ரத் ஜான் (25), குலாம் நபி தார் (42) ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், இங்குள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி கூறியுள்ளார். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை