தேசிய செய்திகள்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றனர்

தானமாக வழங்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு

உயிருடன் இருக்கும்போது பல்வேறு உதவிகளைச் செய்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார், இறப்பிற்குப் பிறகு தனது கண்களையும் தானமாக வழங்கி அனைவரையும் நெகிழவைத்துள்ளார். புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்களும் பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன.

நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் கொண்ட 4 பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அதன் மூலம் புனித் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை